நாய்க்கு அளவுக்கு அதிகமாக உணவு வழங்கிய உரிமையாளருக்கு சிறை

நாய்க்கு அளவுக்கு அதிகமாக உணவு வழங்கிய உரிமையாளருக்கு சிறை

நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு வழங்கியமையால் நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நாயின் உரிமையாளரான பெண்ணுக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நகி (Nuggi) என்ற நாய் 53 கிலோகிராம் எடையும், கடுமையான உடல் பருமனும் கொண்டிருந்தது.

நாய்க்கு அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அந்நாய்க்கு உடல் எடை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்த நாயை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். 2 மாத சிகிச்சையில் 8.8 கிலோ குறைந்த பின்னரும் கல்லீரல் இரத்த கசிவால் அந்த நாய் இறந்து போனது. அதற்கு அதீத உடல் எடையே காரணமாக கூறப்படுகிறது.

இதனால் மானுகா மாகாணத்தின் நீதிமன்றம் நாயின் உரிமையாளருக்கு 1,222 நியூசிலாந்து டொலர் அபராதமும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையும் ஓராண்டு காலத்திற்கு நாய் வளர்க்கும் உரிமையையும் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
Share This