சிறுவனின் கன்னத்தில் அறைந்த துருக்கி ஜனாதிபதி !

சிறுவனின் கன்னத்தில் அறைந்த துருக்கி ஜனாதிபதி !

துருக்கி ஜனாதிபதி மேடையில் வைத்து ஒரு சிறுவனை கன்னத்தில் அறைவது போன்ற விடியோ வைரலாகி வருகிறது.
துருக்கியில் நகர்ப்புற வளர்ச்சிக்காக கடந்த சனிக்கிழமையில் (ஜூலை 27) நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் பங்கேற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சியின்போது, மேடையேறி வந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர், ஜனாதிபதியின் கையில் முத்தமிடாமல் சென்றுள்ளார். இதனையடுத்து, அந்த சிறுவனின் கன்னத்தில் ஜனாதிபதி மெதுவாக அறைவதுபோல தட்டுகிறார். பின்னர், அந்த சிறுவன் ஜனாதிபதியின் கையில் முத்தமிட்டுவிட்டு, பரிசுப்பொருளும் பெற்று சென்றுவிட்டார்.
இந்த நிகழ்வு தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோ வைரலாகி வரும்நிலையில், ஜனாதிபதியின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்புகளும், இது சாதாரண விஷயம்தான் என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் மேடையிலேயே ஒரு சிறுவனின் கன்னத்தில் அறைகிறார் என்றால், திரைக்குப் பின்னே என்னவெல்லாம் நடக்குமோ?” என்று கேள்வி எழுப்புகிறார். மற்றொருவர்,ஜனாதிபதியின் இந்த செயல் அருவறுக்கத்தக்கதாக உள்ளது” என்று கூறுகிறார்.

சில பயனர்கள் ஜனாதிபதியின் செயலை ஆதரித்து கருத்து பதிவிட்டனர். துருக்கிய கலாச்சாரத்தில் கைகளில் முத்தமிடுவது மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டிகளின் கைகளை முத்தமிடுவது மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது, குறிப்பாக துருக்கியில். அவ்வாறு செய்யாவிட்டால், இளம் வயதிலேயே திருத்தங்கள் செய்யப்படுகின்றன” என்று ஒரு பயனர் கூறுகிறார்.

இருப்பினும், துருக்கி ஜனாதிபதி இதற்கு முன்னும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

ஜனாதிபதி எர்டோகன் குடும்பத்தின் அண்டை வீட்டாரைப் பார்வையிட சென்றபோது, துருக்கி தேசிய அணி டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் கேட்ட ஒரு குழந்தையை, எர்டோகன் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, 2021ஆம் ஆண்டில், சலர்கா சுரங்கப்பாதை திறக்கப்பட்டபோது, ஒரு சிறுவனின் தலையை எர்டோகன் தட்டினார் என்ற செய்திகள் வெளியாகியிருந்தன.

கூடுதலாக, கடந்தாண்டு, எர்டோகன் தனது பேரனை அறைந்ததாகவும் கூறப்பட்டது; இருப்பினும், அந்த கருத்தினை மறுத்த எர்டோகன், தனது பேரனின் தலையை தடவிக் கொடுத்ததாகக் கூறியிருந்தார்.

CATEGORIES
Share This