மூன்றாக பிளவுபட்ட சுதந்திரக்கட்சி: புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

மூன்றாக பிளவுபட்ட சுதந்திரக்கட்சி: புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்று கட்சிகளாக பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உதவியமையினால் நிலைமை மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாநிதி விஜயதாச ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஆதரவளிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நாளை (29) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அந்தக் கட்சியின் உப தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This