ஒலிம்பிக் திருவிழா இன்று பாரீஸில் துவக்கம்

ஒலிம்பிக் திருவிழா இன்று பாரீஸில் துவக்கம்

உலக நாடுகள் பங்கு கொள்ளும் ஒலிம்பிக் திருவிழா இன்று (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக தொடங்குகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. 33வது முறையாக பிரான்ஸ் தலைநகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டி இன்று (ஐூலை 26) தொடங்கி ஆகஸ்ட் 11ம் திகதி அன்று நிறைவு பெறுகிறது.

இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இம்முறை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சம எண்ணிக்கையில் பங்கு கொள்கிறார்கள். மொத்தம் உள்ள 32 விளையாட்டுகளில் 46 பந்தயங்கள், 324 வகை பிரிவுகளில் போட்டி நடக்கிறது.

இம்முறை அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பாக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து 592 பேரும் சீனாவில் இருந்து 338 பேரும் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கிறார்கள். ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். .

117 பேர் கொண்ட இந்திய அணி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து 117 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் உட்பட 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

CATEGORIES
Share This