பூமியை நெருங்கும் சிறுகோள் நாசா வெளியிட்ட தகவல்!
விண்வெளியிலுள்ள சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (2011 MW1) என நாசாவினால் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோளானது மணிக்கு 28,946 கிலோமீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த சிறுகோள் இன்று (25) பூமியின் சுற்று வட்டப்பாதையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சிறுகோள் ஆபத்தானது என்றாலும் இதனால் பூமிக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என குறிப்பிடப்படுகின்றது.
CATEGORIES உலகம்