50 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!
அவுஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலின் சிதைவுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 1969ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி கிழக்கு கடற்கரை நகரங்களான நியூகேஸில் மற்றும் டவுன்ஸ்வில்லிக்கு இடையே எஃகு ஏற்றிச் சென்ற கப்பலொன்று புயலில் சிக்கிய நிலையில் கடலில் மூழ்கியது.
இந்தச் சம்பவத்தின்போது படகிலிருந்த 26 பணியாளர்களில் 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவரினுடைய சடலம் மட்டுமே மீட்கப்பட்டது.
இருப்பினும், பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பினால் (CSIRO) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடலில் மூழ்கிய கப்பலின் சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் 170 மீற்றர் ஆழத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
CATEGORIES உலகம்