பங்களாதேஷ் பொதுத் தேர்தல் – ஷேக் ஹசீனாவின் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி!
பங்களாதேஷில் நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
அவரது கட்சியான அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தாம் போட்டியிட்ட 300 தொகுதிகளில் 152 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்துள்ள நிலையில் ஷேக் ஹசீனாவின் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் மீதமுள்ள இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் உத்தியோகபூர்வமான முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
1996 ஆம் ஆண்டில் முதல் முறையாக பங்களாதேஷின் பிரதமரான ஷேக் ஹஷீனா 2009 ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றார்.
தற்போது அவர் நான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் குறித்த தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் பல பகுதிகளில் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன.
இதன் விளைவாக 16 பேர் கொல்லப்பட்டதுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.