ஓமான் கடற்பகுதியில் மூழ்கிய எண்ணெய் கப்பல்; இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் மாயம்
ஓமான் கடற்பகுதியில் கொமரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானிய பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் கடல்சார் பாதுகாப்பு மையம் (MSC) செவ்வாய்க்கிழமை இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் மையத்தில் உள்ள ராஸ் மத்ரகாவின் தென்கிழக்கில் “கொமரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது” விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக கடல்சார் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
Prestige Falcon எனும் பெயருடைய குறித்த கப்பலில், 13 இந்திய பிரஜைகள் மற்றும் மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கண்காணிப்பு சேவை மரைன் டிராஃபிக் படி, குறித்த கப்பல் ஏமன் துறைமுக நகரமான ஏடனை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கப்பல் கொமரோஸின் கொடியுடன் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.