திடீரென இடிந்து விழுந்த பாடசாலைக் கட்டிடம்; ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு

திடீரென இடிந்து விழுந்த பாடசாலைக் கட்டிடம்; ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடானா நைஜீரியாவில் பிலடியோ மாகாணம் பசா பிஜி என்ற கிராமத்தில் பாடசாலையொன்றின் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மாடிக் கட்டிடமான இந்த பாடசாலையில், சுமார் 150 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்குண்டனர். அதில் 132 பேர் மீட்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

ஆரம்பத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பலி எண்ணிக்கை 22 என தெரிவிக்கப்படுகிறது.

வழக்கம்போல் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், சிக்குண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் ஆசிரியர்கள், மாணவர்கள் என மொத்தமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருப்பவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This