மீண்டுமொரு அரகலய ஆரம்பம்: “நாடாளுமன்ற எரிப்புடனே நிறைவடையும்“

மீண்டுமொரு அரகலய ஆரம்பம்: “நாடாளுமன்ற எரிப்புடனே நிறைவடையும்“

நாட்டில் நிலவும் வேலைநிறுத்தங்கள் தேசத்தை சீர்குலைக்கும் மீண்டுமொரு அரகலயவின் ஆரம்பமாக இருக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“இன்று நிலவும் வேலைநிறுத்தங்கள், நாடாளுமன்ற வளாகத்தை எரிப்பதில் நிறைவடையும் நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கான ஒரு பயிற்சியின் ஆரம்பமாக இருக்கலாம்.

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவோர் சம்பளத்தை உயர்த்துவதற்கான சாத்தியமற்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

ரயில்வே ஊழியர்கள் மற்றும் பிறர் கோரும் சம்பள உயர்விற்கான நிதியை ஒதுக்குவதற்கு, பெறுமதி சேர் வரி மற்றும் பிற வரிகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.

சம்பள உயர்வை வழங்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். தயவு செய்து இதுபோன்ற செயற்களில் ஈடுபடாதீர்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

”ரயில்வே ஊழியர்கள் இன்று வேலைக்குத் திரும்பத் தவறினால் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அவர்கள் பயங்கரவாதத்தை ஏற்று இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விட்டுள்ளனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

CATEGORIES
Share This