திங்கட்கிழமை மாலை 6 மணியும் கொழும்பு அரசியலும்: நடைபெறும் ரகசிய சந்திப்புகள்

திங்கட்கிழமை மாலை 6 மணியும் கொழும்பு அரசியலும்: நடைபெறும் ரகசிய சந்திப்புகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் பின்புலத்தில் கொழும்பில் ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடிக்கடி ரகசிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கிறது.

அதன் காரணமாக தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் குறித்து அரச உத்தியோகஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா ஆறு வருடங்களா என உயர் நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை நிராகரித்தது.

இந்த மனுவை அரசாங்கத்துக்கு சார்பானவரே தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சும்மத்திய எதிர்க்கட்சிகள், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான இறுதி முயற்சியும் உயர் நீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

இந்தப் பின்புலத்திலேயே ஆளுங்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காதென்ற தொனியில் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் அரசியல் மேடைகளில் கருத்துகளை வெளியிட்டு வந்தாலும், அமைச்சர் கஞ்சன விஜேசேகர அதனை நிராகரித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவும், பசில் ராஜபக்சவும் பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்களும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 6 மணிக்கு கொழும்பில் சந்தித்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு வழங்க உள்ளதாக கூறியுள் அமைச்சர் கஞ்சன, சிலரின் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This