சீமான் – விஜய் கூட்டணி: 2026 இல் அதிரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தல்

சீமான் – விஜய் கூட்டணி: 2026 இல் அதிரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தல்

2026ஆம் ஆண்டில் தமிழகத்தில் இடம்பெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தொடர்பிலான கூட்டணிப் பேச்சுகள் தற்போதே ஆரம்பித்துவிட்டன.

ஆளும் திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டுமென்ற தொனிப்பொருளின் கீழ் பல கட்சிகளும் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன.

இதில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் ஒரு கூட்டணியாக சீமான் – விஜய் கூட்டணி உருவாகியுள்ளது.

இதுவரை காலமும் திராவிடக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பயணித்திருந்தார்.

எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெற உள்ள விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களங்காண்கிறது.

என்றாலும், 2026 இல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் சீமானும் விஜயும் அண்மைய நாட்களாக பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாக தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த கூட்டணிக்கான பேச்சுகள் வெற்றியடைந்தால் அது தேர்தலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்த் தேசிய கருத்தியலில் பலமான இளைஞர் பட்டாளத்தை தம்பக்கம் சீமான் ஈர்த்துள்ள நிலையில் விஜய்க்கு உள்ள செல்வாக்கு மற்றும் இளைஞர் பலத்தின் ஊடாக இருவரும் இணைந்தால் அது திமுகவுக்கு பாதிப்பாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தமிழக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று மேலும் சில கட்சிகளும் சீமான் – விஜய் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This