மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரவு தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை திமுக அரசு முழுவீச்சில் எதிர்த்தது. இது பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் எதிரொலித்தது. கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் முன் மாநில அரசை முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை. கச்சத்தீவை முழுமையாக விட்டுக்கொடுத்தது அப்போதைய மத்திய அரசு தான். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.