பாடப் புத்தகத்தில் நடிகை தமன்னா – பெற்றோர் கடும் எதிர்ப்பு!
இந்தியாவில் தனியார் பாடசாலை ஒன்றின் 7ஆம் தரப் பாடப் புத்தகத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடம் உள்வாங்கப்பட்டுள்ளது.இதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.அந்தப் பாடப் புத்தகத்தில் சிந்தி மொழி பேசும் மக்களின் கலாசாரத்தை விளக்கும் வகையிலான பாடம் இணைக்கப்பட்டுள்ளது.
அதில் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர், தமன்னா பற்றிய பாடம் தொடர்பாகப் பாடசாலையின் வட்ஸ்அப் (whatsapp) குழுவில் கேள்வி எழுப்பினர்.அதற்கு முறையான பதில் கிடைக்காமையினால், பாடசாலையின் அதிபரைச் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளனர்.அதற்குப் பாடசாலை நிர்வாகத்தின் தரப்பிலிருந்து சரியான விளக்கம் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர் கர்நாடக கல்விப் பணியகத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.
சில பெற்றோர், தமன்னா பற்றிய பாடத்தை நீக்காவிட்டால் குறித்த தனியார் பாடசாலையிலிருந்து தங்களது பிள்ளைகளை வேறு பாடசாலைக்கு மாற்றப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES இந்திய செய்திகள்