ரணிலின் திட்டங்களை முன்னோக்கி கொண்டுசொல்ல வேண்டும்; விரைவில் அரசாங்கத்துடன் இணையும் ராஜித

ரணிலின் திட்டங்களை முன்னோக்கி கொண்டுசொல்ல வேண்டும்; விரைவில் அரசாங்கத்துடன் இணையும் ராஜித

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களால் 15-20 வரையான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவரப்பட்டிருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கு நான் தயாரில்லை. எனினும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக உள்ளேன்.

ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நான் வாழும் காலத்தில் இலங்கை முன்னைய சோமாலியா போல் ஆவதை காண விரும்பவில்லை. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டால் அதனை ஏன் எதிர்க்க வேண்டும்?.

எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களுக்கான நல்ல திட்டங்களை நாம் ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதியின் செயல்பாடுகளை முன்னோக்கி கொண்டுசெல்ல அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றும் ராஜித சேனாரத்ன, தனியார் தொலைக்காட்சி விவாதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைவில் ராஜித சேனாரட்ன விரைவில் அரசாங்கத்தில் இணைந்து சுகாதார அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

அவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

CATEGORIES
Share This