பெரமுனவின் எம்.பிக்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு: வெளியானது ரகசியம்

பெரமுனவின் எம்.பிக்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு: வெளியானது ரகசியம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் பலம் வாய்ந்த நபரொருவரின் தலையீட்டின் ஊடாக மாதாந்த கொடுப்பனவாக தலா இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொடுப்பனவு பெறும் குழுவில் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவைப் பெறுவதற்காகவே இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஒருவர் ​​தமக்கும் அவ்வாறான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This