போரா ஆன்மீக மாநாடு இலங்கையிலிருந்து கராச்சிக்கு மாற்றம்: ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து

போரா ஆன்மீக மாநாடு இலங்கையிலிருந்து கராச்சிக்கு மாற்றம்: ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து

தாவூதி போரா சமூகத்தின் ஆன்மீக மாநாடான ‘ஆஷாரா முபாரகா’ இலங்கையிலிருந்து பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு கொழும்பு வரவிருந்த பலர் தமது பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள போரா சமூகத்தினர் நேரலை மூலம் நிகழ்வை இணைந்து நடத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைில், நிகழ்ச்சியின் மாற்றம் குறித்த செய்திகள் வந்தவுடன், சில முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாகிஸ்தானுக்கு பயணிக்கும் போது விசா பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் உட்பட சில பார்வையாளர்கள் கொழும்புக்கு வரலாம் என்றும் அவர் சுமடடிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு இன்னும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சையத்னா முஃபத்தால் சைஃபுதீனை அழைப்பதில் பல நாடுகள் ஆர்வம் காட்டியதாகவும், அதன்படி கராச்சி தெரிவுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

ஜூலை ஆறாம் திகதி முதல் 10 நாட்கள் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு கலாசார பரிமாற்றம் மற்றும் ஆன்மீக செறிவூட்டலை வளர்ப்பது மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என இலங்கை சுற்றுலாத்துறை முன்னர் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This