24 வருடங்களுக்கு பின்னர் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரஷ்ய ஜனாதிபதி

24 வருடங்களுக்கு பின்னர் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 24 ஆண்டுகளின் பின்னர் இன்று(18) வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

இதன்போது ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை தலைநகர் பியோங்யாங்கில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

கடந்த செப்டம்பரில் ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்ட வடகொரிய ஜனாதிபதியை Vladivostok நகரில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இரண்டு நாடுகளுக்குமிடையில் ஆழமாகும் உறவுகள் தொடர்பில் கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இருப்பினும் இதுவொரு நட்பு நாட்டுக்கான விஜயமென ரஷ்ய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This