விண்வெளி நிலையத்தில் உருவான ‘உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாக்டீரியா’!
விண்வெளி நிலையத்தைப் பற்றி யாருமே எதிர்பார்க்காத ஒரு செய்தியை தற்பொழுது நாசா வெளியிட்டுள்ளது.
விண்வெளி நிலையத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு வித பாக்டீரியா மரபணு மாற்றத்தின் மூலம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து, ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாக்டீரியாவாக உருமாறி உள்ளது தெரிய வந்துள்ளது. இதை ஆய்வாளர்கள் சூப்பர்பக் என்று அழைக்கின்றனர்.
இந்த வகை பாக்டீரியா Enterobacter bugandensi (எண்டோரோபாக்டர் புகாண்டென்சிஸ்), மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடிய மிக ஆபத்தான பாக்டீரியா என்றும், இந்த வகை பாக்டீரியா பூமியில் பரவினால் இதற்கான சிகிச்சை இருக்குமா என கணிக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.
இந்த வகை பாக்டீடியாவைப் பற்றிய ஆய்வை, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பசடேனாவில் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மருத்துவரான கஸ்தூரி வெங்கடேஸ்வரன் தலைமையில் ஒரு குழு மேற்கொள்ள இருக்கிறது.
பூமியிலிருந்து விண்வெளி நிலையத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களின் மூலமாக இந்த வகை பாக்டீரியா அங்கு தங்கியிருக்கலாம் என்றும், மரபணு மாற்றத்தின் உதவியால் அபரிமித வளர்ச்சி அடைந்து இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.