மெக்சிகோவில் வறட்சியால் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு

மெக்சிகோவில் வறட்சியால் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு

மெக்சிகோவின் வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக குறித்த மீன்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ் வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மெக்சிகோவில் 90 சதவீதமான பகுதிகள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This