போருக்குச் சென்ற இலங்கை இராணுவ வீரர்கள் 70 பேர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை

போருக்குச் சென்ற இலங்கை இராணுவ வீரர்கள் 70 பேர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை

ரஷ்ய – உக்ரைன் போருக்காக அங்குள்ள இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சுமார் 70 பேர் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இல்லை என தேடல் நடவடிக்கைகளுக்காக சென்ற எதிர்க்கட்சி குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் போரில் கலந்துக் கொண்டுள்ள இலங்கை இராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சுமார் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அங்குள்ள இராணுவ வீரர்களுள் சுமார் 220 பேர் நாட்டிற்கு மீண்டும் வருகைத் தரும் நோக்கில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யப் போரில் சிக்கித் தவிக்கும் இலங்கை இராணுவத்தினரை மீட்கும் நோக்கில் காரணங்களை ஆராய்வதற்காக சென்ற பயணத்தை நிறைவு செய்து மீண்டும் நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவினர் சுமார் ஒரு வாரமாக இந்த தேடுதல் நடவடிக்கைகளில ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிராக போரிடுவதற்காக ரஷ்ய இராணுவத்துடன் இணைந்த இலங்கையின் முன்னாள் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This