கனடாவில் உச்சத்தைத் தொட்ட வீட்டு வாடகை: அவதியுறும் புலம்பெயர் தமிழர்கள்

கனடாவில் உச்சத்தைத் தொட்ட வீட்டு வாடகை: அவதியுறும் புலம்பெயர் தமிழர்கள்

கனடாவில் வீட்டு வாடகைத் தொகை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மே மாதத்தில் கனடாவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை இலங்கை ரூபாப்படி 630,000 ஐ (2,200 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது.

Rentals.ca மற்றும் Urbanation நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீட்டு வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வான்கூவர் மற்றும் டொராண்டோவில் 2023 ஆண்டு மே மாதம் முதல் வீட்டு வாடகைத் தொகை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிய நகரங்களான ரெஜினா, கியூபெக் சிட்டி மற்றும் ஹாலிஃபாக்ஸில் ஆண்டுதோறும் 10 வீதத்திற்கும் மேல் வீட்டு வாடகைத் தொகை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் வாடகைக்கு வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.

கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் நிலையில் வீட்டு வாடகை அதிகரிப்பால் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
Share This