இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் இன்று தீவிரம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
வட இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் இன்று திங்கட்கிழமை (03) அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி பஞ்சாப், அரியானா, டெல்லி, ஜம்மு, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இன்று தீவிரமான வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வடுகின்றது.
இவ்வாறிருக்க வட இந்தியாவில் அண்மை காலமாக கடுமையான வெப்ப அலை வீசி வருகின்றது.
CATEGORIES இந்திய செய்திகள்