ஐ.தே.க தலைமையகத்தை ஐக்கிய மக்கள் சக்தியிடம் கையளிக்க வேண்டும்: தேர்தல் முகாமையாளர் சுஜீவ சேனசிங்க

ஐ.தே.க தலைமையகத்தை ஐக்கிய மக்கள் சக்தியிடம் கையளிக்க வேண்டும்: தேர்தல் முகாமையாளர் சுஜீவ சேனசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக் கட்சியின் தேர்தல் முகாமையாளர் சுஜீவ சேனசிங்க, நாங்கள் முன்னாள் ஐ.தே.கட்சியினர் என்பதால் சிறிகொத்தவை உரிமைக் கோருவதற்கு எமக்கு உரிமை உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மனசாட்சியின் படி செயற்பட்டு சிறிகொத்தவை எங்களிடம் ஒப்படைப்பார் என நம்புகிறோம். மீதமுள்ள ஐ.தே.கட்சியினரின் நலனுக்காக அவர் இதனை செய்ய வேண்டும். அவர் சிறிகொத்தவை எங்களிடம் ஒப்படைத்தால் அவரது பாவங்கள் சில மன்னிக்கப்படும்” என்றார்.

ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்க முடியாத காரணத்தினால் நாங்கள் ஐ.ம.ச கட்சியை உருவாக்க நிர்பந்திக்கப்பட்டோம்.

இதற்கிடையில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தைக் குறிப்பிட்ட சேனசிங்க, “அவர் எப்படி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக மாறினார் என்பது நம்ப முடியாததாக உள்ளது.

ரங்கே பண்டார அன்றைய நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவை தீவிரமாக எதிர்க்கும் நபராக விளங்கினார்.

அந்தக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மாற்றுவதற்கு அவர் எம்முடன் முன்னணியில் இருந்தார் எனவும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This