கட்சி உறுப்பினர்களுக்கு கடும் அறிவுறுத்தல் விடுக்கிறார் மகிந்த; ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை
கொழும்பிலிருந்து நாள் பூராகவும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசிக் காலத்தை வீணடிக்காமல் கிராமத்திற்கு சென்று வாக்குகளை சேகரிப்பதற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“வெறுமனே வேட்பாளர்கள் பின்னே ஓடாமல் வேலை செய்யுங்கள்“ என இருவரும் அங்கு கட்சி உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தம்மை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் யாருக்கு ஆதரவு வழங்கப் போகிறோம் என கட்சி உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அது கட்சியின் அனைவரும் இணைந்து எடுக்க வேண்டிய தீர்மானம் என தெரிவித்தார்.
கட்சியின் வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் காலங்களில், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானத்தை மேற்கொள்வதாக மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச இருவரும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.