ஜனாதிபதியின் தேர்தல் மோகம்: வளங்களை தேசியமயமாக்கும் உரிமை அரசாங்கத்திற்கு இல்லை

ஜனாதிபதியின் தேர்தல் மோகம்: வளங்களை தேசியமயமாக்கும் உரிமை அரசாங்கத்திற்கு இல்லை

நாட்டின் தேசிய வளங்களை தேசியமயமாக்கும் உரிமையோ, ஆணையோ ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு இல்லையென என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவத்தார்.

மேலும் கருத்த தெரிவித்த டலஸ் அழகப்பெரும

”பொதுஜன பெரமுனவின் இலட்சியத் தலைவரான மகிந்த ராஜபக்ச தற்போதைய நிர்வாகத்தை அனாதரவான நிலைக்குத் தள்ளியுள்ளார்.

தேர்தல் மோகத்தினூடாக தனது சொந்த அரசியல் இலக்குகளை அடைவதற்காக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்” என அவர் கூறியுள்ளார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வது குறித்தும், பழைய முறையின் கீழ் அடுத்த வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் முக்கிய தரப்பினருடன் கலந்தாலோசிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த திங்கட்கிழமை (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்ற நிலையில் அவர்கள் தொழில் நடவடிக்கைகளின் போது சிரமங்களை எதிர்கொள்வதாக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கூறப்படுவதாக ஜனாதிபதி பிரதமரிடம் தெளிவுபடுத்தியதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

எனவே இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, ஏனைய கட்சிகளுடனும் கலந்தாலோசித்து வேட்புமனுவை இரத்து செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி அறிவித்ததாகவும் அவர் கூறினார்.

இதன்படி, அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுவதுடன் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினரும் இது குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This