இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்: ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்: ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் மறுசுழற்சி மற்றும் பாதுகாப்பு மற்றும் மரங்களை நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், அமெரிக்க தூதர் ஜூலி சிங் மற்றும் அமெரிக்கன் கோனர் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

மேலும், வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளேன் என்று அமெரிக்க தூதர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This