யாழ் தீவு பகுதிகள் இந்தியா வசமாகிறது

யாழ் தீவு பகுதிகள் இந்தியா வசமாகிறது

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் இந்திய முதலீட்டில் மத்திய கடல்வள ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சியை கண்டிப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் தெரிவித்திருக்கின்றது.

அண்மையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மண்டைதீவில்
இந்தியாவினால் மத்திய கடல்வள ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தலா 10 ஏக்கர் வீதம் இரு காணிகள் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். கலந்துரையாடலின் நிறைவில் இணையத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையில் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அதற்கு ஒரு தீர்வினை காணாமல் எங்களுடைய வளங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. மேலும் அண்மையில் தீவகத்தி ல் குறிப்பாக அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு ஆகியவற்றில் மீள் புதப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களுக்கான பூமி பூசை இடம்பெற்றிருந்தது.

அதன் அடுத்த கட்டமாக மண்டைதீவில் கடல்வள ஆய்வு மையம் திறப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக கடற்றொழில் அமைச்சரே கூறுகிறார். இது உண்மையிலேயே பாரதூரமான விடயமாகும். எங்களுடைய கடல்வளத்தையும், அதுசார்ந்த நிலத்தையும் எவருக்கும் விற்பனை செய்யகூடாது.

அவற்றில் எங்களின் ஆதிக்கம் குறைவடைந்தால் மிகவும் பாரதூரமான நிலையேற்படும். இதனை நாங்கள் எதிர்க்கிறோம் எனவும் கூறியுள்ளனர்.

CATEGORIES
Share This