வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திணறும் இலங்கை மக்கள்!
மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் இலங்கை மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதன் காரணத்தினால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் நுகர்வோர் கடன் சுட்டியில் சாதக நிலை பதிவாகியுள்ளது.
எனினும், நாட்டில் தொடர்ச்சியாக வட்டி வீதம் அதிகரித்துச் செல்லும் நிலைமையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணவீக்க நிலைமைகள் குறித்து இலங்கையர்கள் தங்களது கரிசனையை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயப் பொறுமதி கூடியிருப்பதாக அடிக்கடி வெளியாகும் கூற்றுகளுக்கு மாறாக பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதும் குறிப்பிடத்தக்கது.