கச்சதீவை இந்தியாவிடம் மீள கையளிக்க எந்தவித தேவையும் இல்லை!
கச்சதீவை இந்தியாவிடம் மீள கையளிப்பதற்கான எந்தவித தேவையும் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தற்போது தேர்தல் காலம் என்பதால், உள்நோக்கம் கருதி இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கச்சதீவு இந்தியாவுக்கு மீள வழங்கப்படுமாயின், இலங்கையின் ஒரு கிலோ மீற்றர் கடற்பகுதி இந்தியாவுக்கு சொந்தமாகிவிடும்.
எனினும், இலங்கை கடற்பகுதிகளில் இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
CATEGORIES பிரதான செய்தி