வெற் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை 36 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

வெற் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை 36 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

வெற் எனப்படும் பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை நாடாளுமன்றில் 36 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய தினம் உரையாற்றுவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பிரசன்னமாகாதமையினால் சபை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 4 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து 4 மணியளவில் சபை நடவடிக்கைகள் மீள ஆரம்பித்த போது எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் விவாதத்தை கோரியிருந்தனர்.

இந்த நிலையில், நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த கட்டளைக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 19 வாக்குகளும் பதிவாகின.

இதற்கமைய, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 2363/22ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை 36 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதேநேரம், வங்கி தொழில் திருத்தச் சட்டமூலமும் இன்றைய தினம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This