கேஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இன்று நடைபெறும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் – திருமாவளவன்

கேஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இன்று நடைபெறும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் – திருமாவளவன்

கேஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இன்று (மார்ச் 31) நடைபெறும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. கேஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் மார்ச் 31ஆம் திகதி (இன்று) நடைபெறும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. தற்போது அதை உணர்ந்து, பாஜக பட்டியலின பிரிவுத் தலைவர் அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது, அதை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படாமல், சங்பரிவார் அமைப்புபோல செயல்படுகிறது.

பானை சின்னம் கேட்டு நாங்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல்.1ஆம் திகதி (நாளை) விசாரணைக்கு வருகிறது. அப்போது மற்ற மாநிலங்களில் போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வலியுறுத்துவோம் என்றார்.

CATEGORIES
TAGS
Share This