ரஷ்யாவில் எண்ணெய்க் களஞ்சியங்கள் தீக்கிரை!

ரஷ்யாவில் எண்ணெய்க் களஞ்சியங்கள் தீக்கிரை!

ரஷ்யாவின் இரு நகரங்களிலுள்ள எண்ணெய்க் களஞ்சியங்கள் இன்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களையடுத்து அக்களஞ்சியங்கள் தீப்பற்றி எறிவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேஸ்டோவோ மற்றும் ஒரியோல் நகரங்களிலுள்ள எண்ணெய்க் களஞ்சியங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

இவ்விரு நகரங்களும் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் இடைவெளியில் உள்ளன. கேஸ்டோவோ நகரம் மொஸ்கோவுக்கு கிழக்கே 450 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.

ரஷ்யாவின் பல நகரங்கள் மீது உக்ரேன் தாக்குதல்களை நடத்திய நிலையில், இரு நகரங்களில் எண்ணெய்க் களஞ்சியங்கள் தீப்பற்றியுள்ளன.

தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் விசேட படையினர் ஈடுபட்டுள்ளனர் என ரஷ்ய அதகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This