யாழில் வாள்வெட்டு ; இளைஞர் பலி!

யாழில் வாள்வெட்டு ; இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் காரைநகருக்கு சென்று விட்டு நேற்று(11) வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, இதற்கு முன்னதாக நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து இறந்த நபரின் மனைவியால் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் சந்தேகநபர்களில் மூவரை அடையாளம் கண்டுள்ளனர்

அதன்படி, சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This