பேஸ்புக் செயலிழப்பால் 100 மில்லியன் இழப்பு!

பேஸ்புக் செயலிழப்பால் 100 மில்லியன் இழப்பு!

ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் செயலிழந்தமையினால் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் நேற்று திடீரென செயலிழந்தன.

ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ‘மெட்டா’ நிறுவனத்தின் வருமானம் 1.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This