நான் தமிழகத்திற்கு வந்தாலே சிலருக்கு பயம் வந்துவிடுகிறது – பிரதமர் மோடி
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பொதுக்கூட்டம் இன்று மாலை தொடங்கியது.
இந்நிலையில், வணக்கம் சென்னை என கூறி தமிழில் உரையாற்ற பிரதமர் மோடி தொடங்கினார்.
அவர் பேசியதாவது:-
இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வர்த்தகம், பாரம்பிரயம் உள்ளிட்டவற்றில் ஒரு அழியா புள்ள சென்னை.
சமீப காலத்தில் தமிழகம் வரும்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. பாஜகவிற்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது.
வளர்ச்சி அடைந்த பாரதத்தோடு, வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் மோடி இலக்காக கொண்டுள்ளேன். சென்னை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக அரசு, மத்திய அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கு இடையூறாக இருக்கிறது.
இயற்கை பேரிடர் ஏற்பட்டபோது மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக விளம்பரம் மட்டுமே செய்தார்கள். நீங்கள் துன்பத்தில் இருந்தபோது அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவில்லை.
மத்தியில் உள்ள பாஜக அரசு, உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறது. உங்களுக்காக பணியாற்றுகிறது. ரேசனில் இலவச அரிசி தருகிறது. இலவசமாக கொரோனா தடுப்பூசி தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.