இன்றைய ராசிபலன் – 04.03.2024

இன்றைய ராசிபலன் – 04.03.2024

பொதுப்பலன்: வாகனம் விற்க, தற்காப்பு கலைகள் பயில, உடற்பயிற்சி, அழகு சாதனங்கள் வாங்க, வீடு, மனை விற்க, அதிகாரிகளை சந்திக்க நன்று. சிவஸ்துதி படித்து, சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர் அபிஷேகம், தாமரை, அரளி மலர்கள், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் காரியத் தடைகள் நீங்கி நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.

மேஷம்: இன்றைய பொழுது சற்று மந்தமாக இருக்கும். வீண் கோபம், பணத் தட்டுப்பாடு வந்துபோகும். குடும்பத்தில் நிலவிய கூச்சல் குழப்பம் விலகும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

ரிஷபம்: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். வரவேண்டிய பணம் சற்று தாமதமாகும். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்: திடீர் யோகம், பண வரவு உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடகம்: புது திட்டங்களை தீட்டுவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். மருத்துவ செலவுகள் குறையும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

சிம்மம்: கூச்சல் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். அலுவலகத்தில் புது பொறுப்புகள் ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சகோதர, சகோதரிகள் பாசமாக இருப்பார்கள்.

கன்னி: பிரபலங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

துலாம்: கடந்தகால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். வியாபாரத்தில் பணியாளர்கள் நன்றியுடன் இருப்பார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். நடக்கும் செயல்கள் திருப்திகரமாக இருக்கும். வாகனத்தில் இருந்த பழுது நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

தனுசு: மனநிறைவாக இருப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கோபம், டென்ஷனுக்கு இடம்தராமல் பொறுமையுடன் இருங்கள். தேவையற்ற விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்.

மகரம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் தேவை அறிந்து உதவுவீர்கள். குடும்பத்தில் அமைதி தங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தொழில் போட்டிகள் விலகும்.

கும்பம்: விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசு தொடர்பான முக்கிய நபர்களை சந்திப்பதால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரிசெய்வீர்கள்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய நண்பர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் புது ஆர்டர்கள் கிடைக்கும்.

CATEGORIES
TAGS
Share This