இன்றைய ராசிபலன் – 02.03.2024

இன்றைய ராசிபலன் – 02.03.2024

பொதுப்பலன்: மருந்துண்ண, வளர்ப்பு பிராணிகள் வாங்க, மூலிகை குளியல் செய்ய, உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள் வாங்க, வீடு மனை வாங்குவதற்கு முன்பணம் தர, மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், தடைகள் விலகும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் மன அமைதி கிடைக்கும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதிலும் வெற்றி கிடைக்கும்.

மேஷம்: குடும்பத்தில் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் எச்சரிக்கையாக பழக வேண்டும். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியை தவிர்க்கவும். பழைய வழக்குகள் சாதகமாகும்.

ரிஷபம்: உடன் பிறந்தவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். மகனுக்கு தள்ளிப்போன திருமணம் கூடி வரும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

மிதுனம்: நெளிவு, சுளிவுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். எதிர்பார்த்த கடனுதவி கிட்டும். கலை பொருட்கள் சேரும்.

கடகம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு தேடி வரும். குலதெய்வ வழிபாடு மனநிறைவை தரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்: திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் உண்டு.

கன்னி: பால்ய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் பெருகும். வெளியூர் பயணங்களால் வெற்றி உண்டு. வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்று தீர்ப்பீர்கள். தாயின் உடல்நலம் சீராகும்.

துலாம்: மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். யாரை நம்புவது என்ற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். பழைய வாகனத்தை விற்க முயல்வீர்.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு தடைகளை உடைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். தலைச்சுற்றல்,வயிற்றுவலி நீங்கும். சகோதர வகையில் ஆதரவு கிடைக்கும். பணவரவு உண்டு.

தனுசு: வெளிவட்டாரத் தொடர்பு சாதகமாக அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். அழகு, இளமை கூடும். குழப்பம் நீங்கி வீட்டில் அமைதி தங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

மகரம்: பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கும்பம்: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டுக்கு அழகு சாதன பொருட்களை வாங்குவீர். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

மீனம்: பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் விலகும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

CATEGORIES
TAGS
Share This