யாழில் இனத் துவேசத்தை தூண்டிய பொலிஸார் விளக்கமறியலில்!

யாழில் இனத் துவேசத்தை தூண்டிய பொலிஸார் விளக்கமறியலில்!

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுதிக்குள் இனத்துவேச கருத்துக்களை தெரிவித்து, சக பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

கடந்த ஞாயிறுக்கிழமை (25) இரவு மது போதையில் உள்நுழைந்து சக பொலிஸாருடன் முரண்பட்டு, தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இனத்துவேச கருத்துக்களை கூறி முரண்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை (26) யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, நிர்வாக ரீதியான விசாரணைகளை முன்னெடுத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில், பணி இடைநிறுத்தம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This