யாழ். புத்தூரில் தீக்கிரையான வீடு – பணம் உட்பட பல உடமைகள் சேதம்!

யாழ். புத்தூரில் தீக்கிரையான வீடு – பணம் உட்பட பல உடமைகள் சேதம்!

யாழ். புத்தூர் மேற்கு வளர்மதி பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்று தீக்கிரையானது.
அண்ணாமலை மகேந்திரன் என்பவரின் வீடே இவ்வாறு முற்றாக தீக்கிரையானது.
மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தின் வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத சமயம் தீப்பரவல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி வாங்குவதற்காக வைத்திருந்த 8 இலட்சம் ரூபா பணம் உட்பட பல உடமைகள் தீயில் எரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றபோதும் வீடு முற்றாக எரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் இடம் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அச்சுவேலி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This