இன்றைய ராசிபலன் – 26.02.2024

இன்றைய ராசிபலன் – 26.02.2024

பொதுப்பலன்: திருமணம், கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த, வியாபாரம் தொடங்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, பத்திரப் பதிவு செய்ய நன்று. சிவஸ்துதி படித்து, சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர் அபிஷேகம், தாமரை, அரளி மலர்கள், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் காரியத் தடைகள் நீங்கி நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.

மேஷம்: உங்களிடம் மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவி வழியில் நல்ல சேதி வரும்.

ரிஷபம்: பேச்சாற்றல், புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் மனம் செல்லும்.

மிதுனம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

கடகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வாகன செலவு நீங்கும். வீண் அலைச்சல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் உடல்நலம் சீராக இருக்கும்.

கன்னி: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளைக ளால் மரியாதை, அந்தஸ்து கூடும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

துலாம்: வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் புது தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும். பேச்சில் பொறுமை தேவை.

மகரம்: சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். முக்கிய நபர்களால் நன்மை உண்டு.

கும்பம்: பிள்ளைகள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம் பக்கத்தினர் சிலரது செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைவீர்கள்.

மீனம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. ஆன்மிக நாட்டம் கூடும்.

CATEGORIES
TAGS
Share This