தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு!

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு!

தெற்கு வெனிசுலாவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பொலிவார் மாநிலத்தில் உள்ள புல்லா லோகா சட்டவிரோத தங்க சுரங்கம், இடிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சுரங்கத்திற்கு அருகில் உள்ள நகரமான லாப்பராகுவாவிலிருந்து 7மணிநேர படகு பயணத்தின் பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மேலதிக தகவல்களுக்காக காத்திருந்துள்ளனர்.

இதன்போது, குறித்த பகுதியில் இருந்து வந்த படகில் 15 சுரங்க தொழிலாளர்களும் 23 சடலங்களும் மீட்கப்பட்டதாக அன்கொஸ்துரா நகராட்சியின் முதல்வர் யோர்கி அர்சிநிகா குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This