ஜனாதிபதியின் புதிய பொறுப்புக்கூறல் முயற்சி குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கவலை!

ஜனாதிபதியின் புதிய பொறுப்புக்கூறல் முயற்சி குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கவலை!

இலங்கை அரசாங்கம் புதிய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு முன்னர் முன்னைய ஆணைக்குழுக்கள் தெரிவித்துள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாதஅளவிற்கு தாண்டியுள்ளது எனவும் ஐடிஜேபி தெரிவித்துள்ளது.

இருந்தும் பிறிதொரு ஆணைக்குழுவை அரசாங்கம் உருவாக்கவுள்ளது உண்மை மற்றும் ஐக்கியம் நல்லிணக்கம் ஆணைக்குழு எனப்படும் இந்த புதிய ஆணைக்குழு உண்மையை கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 36 ஆணைக்குழுக்களின் வரிசையில் இணைந்துகொண்டுள்ளது எனவும் உண்மை நீதிக்கான சர்வதேச திட்டம் தெரிவித்துள்ளது.

எனினும் நீதியும்பொறுப்புக்கூறலும் இன்னமும் சாத்தியமாகத விடயங்களாவே காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நீதிகோரி காணாமல்போனவர்களின் உறவுகள் துணிச்சலுடன் வீதிக்கு இறங்கி இன்றுடன் 8 வருடங்களாகின்றன என தெரிவித்துள்ள ஐடிஜேபி இதன் பின்னர் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை அறியாமலே 240 முதிய உறவினர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரித்து 37 சிவில்சமூக அமைப்புகளும் 19 சிவில்சமூக செயற்பாட்டாளர்களும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் அவர்கள் கடந்தகால ஆணைக்குழுக்களின் தோல்விகளை சுட்டிக்காட்டுகின்றனர் அவர்கள் வெளியிட்ட ஆவணங்களை அரசாங்கங்ம் பகிரங்கப்படுத்த தவறியதை சுட்டிக்காட்டுகின்றனர் புதிய ஆணைக்குழுவிற்கு போதிய அதிகாரங்கள் இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு இல்லாததை சுட்டிக்காட்டுகின்றனர் பொருத்தமான நீதிப்பொறிமுறை இன்மை கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியமையையும் சுட்டிக்காட்டுகின்றனர் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் அமைத்து, நாம் அடையாளம் கண்ட 36 ஆணைக்குழுக்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இவற்றில் 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. பெரும்பாலான ஆவணங்கள் அரசாங்க இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும், வெறும் ஒருசில ஆணைக்குழுக்களின் அறிக்கைகளே அவ்விணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

உண்மையில், கடந்த கால ஆணைக்குழுக்களால் வெளியிடப்பட்ட 22 அறிக்கைகளில், வெறும் 11 அறிக்கைகளின் பிரதிகள் மட்டுமே எம்மால் கண்டுபிடிக்கமுடிந்தது.எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த காலங்களில், என்ன நடந்தன என்பதை நிறுவுவதற்கான விசாரணை வடிவங்களே மேற்கொள்ளப்பட்டன, மாறாக, குற்றத்திற்கு காரணமானவர்களைப் பொறுப்புக் கூறவைப்பதற்காக அல்ல, இதனால், அதே நபர்களால் திரும்பத்திரும்ப பெரும் அநீதிகள் மேற்கொள்ளப்பட வழிவகுத்தது.

சிறிலங்கா ஜனாதிபதி அண்மையில் பரிந்துரைத்துள்ள பொறுப்புக்கூறல் முயற்சி தொடர்பான கடுமையான கவலைகளை இது எழுப்புகின்றது.

இணையத்தளத்தில் கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்வதன் மூலமாக அவற்றின் உள்ளடக்கங்களை அங்கீகரிப்பதேஎனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

உண்மையை நோக்கிய முதலாவது படியாக அமையும். நேர்மைத்தன்மையுடன் செயற்படுவதற்கு, படலந்த சித்திரவதைக்கூடத்தில் நடந்த சித்திரவதைகளும், தடுத்து வைப்புக்களும் ரணில் விக்கிரமசிங்கவிற்குத் தெரியாமல் நடந்திருப்பது சாத்தியமில்லை5 என்று கூறும் பத்தலந்த ஆணைக்குழுவின் அறிக்கை போன்ற, ஜனாதிபதியின் பெயரையும் உள்ளடக்கும் அறிக்கைகளையும் இதில் உள்ளடக்கவேண்டும்.

இதுவரை வெளியிடப்படாத அறிக்கைகளை வெளியிடும்படியும், கடந்த கால அறிக்கைகள் அனைத்தையும் பின்வரும் ஜனாதிபதி இணையத்தளத்தில் வெளியிடும்படியும் சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம்.எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This