இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல்!

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல்!

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை எதிர்வு கூறியுள்ளது.

இதனடிப்படையில் அனல் மின் உற்பத்தி 63 சத வீதம் வரை அதிகரிக்கும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

மின்தேவை அதிகரித்துள்ள நிலையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறானதொரு நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This