ஒரே நேரத்தில் 20 கைப்பேசிகளை பயன்படுத்தும் சுந்தர் பிச்சை!
கூகுள் CEO சுந்தர் பிச்சை ஒரே நேரத்தில் 20 கைப்பேசிகளை பயன்படுத்தக்கூடியவர். ஆனால், அவர் அவற்றை பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவதில்லை.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் சுந்தர்பிச்சை கூறுகையில், “நான்ஒரே நேரத்தில் 20 கைப்பேசிகளை பயன்படுத்துவேன். தொடர்ந்து புதிய கைப்பேசிகளுக்கு மாறுவேன். வேலை நிமித்தமே நான்இவ்வாறு செய்கிறேன். கூகுள் தயாரிப்புகள் ஒவ்வொரு கைப்பேசிகளிலும் எப்படி இயங்குகிறது என்பதை இதன் மூலம் சோதித்து அறிவேன்” என்று கூறினார்.
அவரது குழந்தைகள் யூடியூப்பார்ப்பது குறித்து அவரிடம் கேட்டதற்கு, “ நம் குழந்தைகளுக்கு தொழில்நுட்ப அறிவை ஏற்படுத்துவது அவசியம். அதேசமயம், தொழில்நுட்பங்களை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்” என்றார்.
கடவுச்சொல் குறித்து அவர்கூறுகையில், “நான் அடிக்கடி கடவுச்சொல்லை மாற்ற மாட்டேன். அதற்குப் பதிலாக, Login செய்வதை இரு முறை உறுதிபடுத்தும் வசதியை பயன்படுத்துகிறேன். இது மிகவும் பாது காப்பானது’’ என்று தெரிவித்தார்.