நியமனம் வழங்கி வைப்பு!

நியமனம் வழங்கி வைப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த, வலப்பனை, அம்பகமுவ மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சமுர்த்தி வங்கிகளில் தற்காலிகமாக உதவி முகாமையாளர் பதவிகளை வகித்து வந்த ஏழு பேருக்கு நிரந்தர உதவி முகாமையாளர் நியமனம் மாவட்ட செயலாளர் நந்தன கலபடவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு மாவட்ட சமுர்த்தி பணியின் அத்தியட்சகர் எஸ்.எம்.ரத்ணதாஸ தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இயங்கும் சமுர்த்தி திணைக்களத்தில் புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது .

இதன்போது ஹங்குராங்கெத்த பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கிக்கு கே.எம்.உடுவெல்ல, வலப்பனை பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கிக்கு பி.ஜி.ஐ.பாலசூரிய, நுவரெலியா பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கிக்கு கே.ஏ.நவநீதராஜா, .யு.எம்.விக்ரமசிங்க, ஆர்.எஸ்.நிலந்தி குமாரி ஆகியோருக்கு உதவி வங்கி முகாமையாளர் நியமன கடிதம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி வங்கிக்கு எஸ்.டி.வனிகசேகர, மற்றும் கே.எஸ்.கே.ரணசிங்க ஆகியோர் உதவி வங்கி முகாமையாளர் நியமனம் பெற்று இவர்கள் அனைவருக்குமான நியமன கடிதங்களை மாவட்ட செயலாளர் நந்தன கலபட உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This