யாழ்.இணுவில் விபத்து: போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

யாழ்.இணுவில் விபத்து: போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

யாழ். இணுவில் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை வலியுறுத்தி நேற்று (15) ரயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி, குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்தும் கடவை காப்பாளர் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என குறிப்பிட்டும் பிரதேச மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

6:45 மணியளவில் யாழிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயிலை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலத்த கோஷம் எழுப்பி பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் உயிரை காவு கொள்ளாதே! தினம் தினம் பயந்த பயணமா? ஆகிய கோஷங்கள் தாங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

பொதுமக்கள், கிராம மட்டத்தை சேர்ந்தவர்கள் என பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நேற்று யாழ். இணுவில் பகுதியில் ரயிலுடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் தந்தை – மகள் உயிரிழந்துள்ளதுடன் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This