யாழ். அச்சுவேலி வைத்தியசாலையில் இனம்தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ். அச்சுவேலி வைத்தியசாலையில் இனம்தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ். அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலைக்கு நேற்று (15) மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாகத் தாக்கினர்.

பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டினர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This