இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு 19ஆம் திகதி!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு 19ஆம் திகதி!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, தேசிய மாநாடு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செயலாளர் பதவியை ஞா.சிறிநேசனும், ச.குகதாசனும் ஒவ்வொரு வருடங்கள் பகிர்ந்து கொள்ள இணக்கம் கண்டிருந்தனர். எனினும் யார் முதல் பதவிக்காலத்தை வகிப்பது என்பதில் இணக்கம் எட்டப்படவில்லை. இன்று இரவு வரை இந்த விவகாரம் தீர்வின்றியே காணப்படுகிறது.

எனினும், 19ஆம் திகதி திருகோணமலையில் தேசிய மாநாட்டை நடத்துவதென கட்சி தீர்மானித்துள்ளது. இதற்காக மண்டபமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This