கிழக்கு மாகாண ஆளுநருக்கு நன்றி தெரிவித்த தமிழக அரசு!

கிழக்கு மாகாண ஆளுநருக்கு நன்றி தெரிவித்த தமிழக அரசு!

சென்னையில் இடம்பெற்ற அயலக தமிழர் மாநாட்டில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாடு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடைய ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானுக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் கலை, கலாசாரத்தை எடுத்துரைத்து அயலக தமிழர் மாநாடு வெற்றியடைய வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அயலக தமிழர் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்று நிகழ்வை கௌரவப்படுத்தியமை மகிழ்ச்சி அளிப்பதாகவும், எதிர்கால நிகழ்வுகளுக்கும் தங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This